இலங்கை கிரிக்கற் சபைக்கு: தற்காலிக இடைக்கால நிர்வாக குழு !

Friday, June 1st, 2018

சிறிலங்கா கிரிக்கட்டின் தேர்தல் பிற்போடப்பட்டுள்ள நிலையில், தற்காலிகமாக இடைக்கால நிர்வாக குழு ஒன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஃபைசர் முஸ்தபா, ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர், இந்த இடைக்கால நிர்வாகக் குழு குறித்த அறிவிப்பு வெளியாக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபாலவின் தலைமையிலான கிரிக்கட் நிர்வாக சபையின் அதிகாரக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

இன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த தேர்தல், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் எதிர்வரும் ஜுன் மாதம் 14ம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த முறை தேர்தலில் சிறிலங்கா கிரிக்கட் தலைவர் பதவிக்காக போட்டியிடும் வேட்பாளரான நிஷாந்த ரணதுங்க தாக்கல் செய்திருந்த மேன்முறைப்பாட்டு மனுவின் அடிப்படையில், இந்த தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts: