இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் !

Tuesday, May 22nd, 2018

இலங்கை கிரிக்கட்டின் தலைவர் தேர்தலுக்காக நான்கு பேர் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். விளையாட்டுத் துறை அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய எதிர்வரும் 31ஆம் திகதி இந்த தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்காக இலங்கை கிரிக்கட்டின் தற்போதைய தலைவர் திலங்க சுமதிபாலவுடன், நிஷாந்த ரணதுங்க, ஜயந்த தர்மதாச மற்றும் மொஹான் டீ சில்வா ஆகியோரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

முன்னதாக 2018ஆம் ஆண்டிற்கான இலங்கை கிரிக்கட்டின் தேர்தல் கடந்த 19ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில், அது பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: