இலங்கை கிரிக்கட் அணி தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Thursday, August 24th, 2017

கிரிக்கட் அணியை புதிய பாதைக்கு கொண்டு செல்லும் நோக்கில் விசேட கலந்துரையாடலொன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்கிரிக்கட்டின் அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் மற்றும் நிபுணர்கள், ஊடகவியலாளர்கள் என அனைவருக்கும் இந்த கலந்துரையாடலுக்காக அழைப்பு விடுக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கட் அணிக்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து, கலந்துரையாடி, அறிக்கையொன்றை தயாரித்து, அதனை கிரிக்கட் நிர்வாக சபையிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.இது கிரிக்கட் நிர்வாக சபையின் நடவடிக்கை அல்ல.இலங்கை கிரிக்கட் விளையாட்டை கட்டியெழுப்ப, தேசிய கொள்ளையொன்றை உருவாக்குவதற்கான அமைச்சின் நடவடிக்கையாகும்எனவே, கிரிக்கட்டை கட்டியெழுப்ப விருப்பமுள்ள அனைவரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுப்பதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Related posts: