இலங்கை கிரிக்கட் அணியினர் மகிழ்ச்சியில்!

Thursday, April 5th, 2018

ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் இலங்கை தேசிய கிரிக்கட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களின் சம்பளம் மற்றும் ஒப்பந்த தொகையை  அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக கிரிக்கட் தகவல்கள்தெரிவிக்கின்றன.

குறித்த நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் குறிப்பிடுகின்றன.

2019 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை இலக்கு வைத்து அணியின் அனைத்து பிரிவுகளையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த வேதன அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும்  இதன்படிவேதனம் நூற்றுக்கு 30 முதல் 50 சதவீதத்திற்கும் இடையே அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களின் வகைப்படுத்தலுக்கு அமைய இந்த வேதனம் அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை, டெஸ்ட் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளின் கட்டணங்களும் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: