இலங்கை கிரிக்கட்டுக்கு புதிய தேர்வுக்குழுவை நியமிப்பதற்கு தீர்மானம் – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Thursday, January 28th, 2021

இலங்கை கிரிக்கட்டுக்கு புதிய தேர்வுக்குழுவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கும், இலங்கை கிரிக்கட் பிரதானிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தமது பேஸ்புக் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது –

தேசிய மற்றும் மாகாண மட்ட போட்டிகளை நடத்துவதற்கும் இந்தக் கலந்துரையாடலில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக வீரர்களின் ஒழுக்கம் மற்றும் உடற்தகுதிக்கு முன்னுரிமையளித்தல், திறன் அடிப்படையில் வீரர்களின் ஒப்பந்தங்களை மேற்கொள்ளல் மற்றும் பிரதான பயிற்றுவிப்பாளருக்கு உதவியளிக்கும் வகையில், பணிப்பாளர்களையும், ஆலோசகர்களையும் நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என கறிப்பிடப்பட்டள்ளது.

இதன்போது இலங்கை கிரிக்கட் அணியின் பிரதானிகள், பிரதான பயிற்றுவிப்பாளர், தேசிய விளையாட்டு சபை அதிகாரிகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: