இலங்கை உலக கிண்ணத்தை வென்று 20 வருடம் பூர்த்தியை முன்னிட்டு விசேட கண்காட்சி போட்டி

Sunday, March 20th, 2016

இலங்கை உலக கிண்ணத்தை வென்று 20 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கண்காட்சி கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.

கொழும்பு சீ.சீ.சீ. மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பழைய மற்றும் புதிய கிரிக்கெட் வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். 1996 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்ற அர்ஜூன ரணதுங்க தலைமையிலான அணியின் வீரர்களும், சிரேஷ்ட கிரிக்கெட் வீரர் ரோய் டயஸ் தலைமையிலான அணியும் விளையாடிய போட்டியை கண்டுகளித்த ஜனாதிபதி, அவர்களுக்கான பரிசுகளையும் வழங்கினார்.

இலங்கை கிரிக்கெட் அணியில் ஆரம்பம் முதல் விளையாடிய சிரேஷ்ட வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஜனாதிபதியின் கையால் அவர்களுக்கு இந்த பரிசுகள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை இன்று நடத்தப்பட்ட போட்டியில் திரட்டப்பட்ட நிதி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் சிறுநீரக நோயாளர்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டதுடன் அதற்கான காசோலையை சிரேஷ்ட கிரிக்கெட் வீரர் ரொஷான் மஹாநாம ஜனாதிபதியிடம் கையளித்தார்.

Related posts: