இலங்கை – இந்திய முதல் போட்டியில் தோற்றது இலங்கை!

Wednesday, January 11th, 2023

இலங்கை அணியுடனான முதலாவது சர்வதேச ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 67 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சூழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 373 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பில் விராட் கோஹிலி 113 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 83 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றுக் கொடுத்தனர்.

374 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 306 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இலங்கை அணி சார்பில் தசுன் ஷானக்க ஆட்டமிழக்காது 108 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 47 ஓட்டங்களையும் பெற்றனர். இதன்படி, இந்திய அணி முதலாவது ஆட்டத்தில் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

000

Related posts: