இலங்கை  – இந்திய டெஸ்ட் : வலுவான நிலையில் இந்தியா!

Monday, November 27th, 2017

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று நிறைவு பெற்றது.

இன்றைய நாள் ஆட்டம் நிறைவடையும் போது தமது 2வது இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வரும் இலங்கை அணி ஒரு விக்கட்டை இழந்து 21 ஓட்டங்களை பெற்றிருந்தது

முன்னதாக இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக 6 விக்கட்டுக்களை இழந்து 610 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இந்திய அணி சார்பில் அணித்தலைவர் விராட் கோஹ்லி 213 ஓட்டங்களையும், சதேஸ்வர் புஜாரா 143 ஓட்டங்களையும், முரளி விஜய் 128 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்ததுடன் ரோஹித் சர்மா ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களை பெற்றார்.

முன்னதாக இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 205 ஓட்டங்களை பெற்றது

இதேவேளை, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் ஏஷஸ் தொடரின் முதலாவது போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் இன்று நிறைவு பெற்றது

இன்றைய நாள் ஆட்டம் நிறைவடையும் போது தமது வெற்றி இலக்கை நோக்கி 2வது இன்னிங்ஸில் ஆடிவரும் அவுஸ்திரேலியா அணி விக்கட்டிழப்பின்றி 114 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முன்னதாக இங்கிலாந்து அணி தமது 2வது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 195 ஓட்டங்களை பெற்றது.

அவுஸ்திரேலியா அணி தமது முதல் இன்னிங்ஸில் சகலவிக்கட்டுக்களையும் இழந்து 328 ஓட்டங்களையும், இங்கிலாந்து அணி சகலவிக்கட்டுகளையும் இழந்து 302 ஓட்டங்களையும் பெற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: