இலங்கை – இங்கிலாந்து இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவு !

Thursday, November 8th, 2018

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவு பெற்றுள்ளது.

இப்போட்டி காலி சர்வதேச விளையாட்டுத்திடலில் இடம்பெற்று வருகிறது.போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவு வரை விக்கட் இழப்பின்றி 35 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களை பெற்றது.துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக எஞ்சலோ மத்திவ்ஸ் 52 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.பந்துவீச்சில் இங்கிலாந்து அணிசார்பாக மொஹின் அலி 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார். முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 321 ஓட்டங்களை பெற்றது.துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணிசார்பாக பென் போக்ஸ் 107 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.