இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் – மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

Saturday, August 31st, 2024

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 25 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இதற்கமைய இலங்கை அணியை விட இங்கிலாந்து அணி 256 ஓட்டங்களால் முன்னில பெற்றுள்ளது.

இலங்கை அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் தமது முதலாம் இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நிலையில், சகல விக்கெட்டுக்களையும் இழந்து 196 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 427 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: