இலங்கை -– ஆஸி 4வது ஒரு நாள் ஆட்டம் இன்று!

Wednesday, August 31st, 2016

இலங்கை – -அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4 வது ஒரு நாள் சர்வதேச போட்டி இன்று தம்புல்ல சர்வதேச வினையாட்டு அரங்கில் பகலிரவுப் போட்டியாக ஆரம்பமாகின்றது.

அவுஸ்திரேலிய அணி தொடரில் 2-−1 என முன்னிலை வகிக்கின்றது ஆஸி வென்றால் தொடர் அவ்வணி வசமாகும் இலங்கை அணி வென்றால் தொடர் சமனாகும்.இறுதியாட்டம் எதிர்வரும் 4ம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கை வந்த அவுஸ்திரேலிய அணியின் முக்கிய சில வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில வீரர்கள் காயம் காரணரமாக விளையாடாமல் தவிர்த்து வருகின்றனர்.அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டு, ஒருநாள் அணிக்கு அழைக்கப்பட்ட சோன் மார்ஷ் அணியிலிருந்து காயம் காரணமாக விலகுவதாக அவுஸ்திரேலியா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இவர் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது இடது கை விரலில் காயம் ஏற்ப்பட்டதாக அவுஸ்திரேலிய அணியின் உடல்கூற்று நிபுணர் டேவிட் வீக்லே குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஸ்டீவ் ஸ்மித்,மற்றும் மிட்சல் மார்ஷ் ஆகியோருக்கு எதிர்காலத் தொடர்களை கருத்தில்கொண்டு முன்னதாகவே ஓய்வை கொடுப்பதாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், சோன் மார்ஸும் தொடரிலிருந்து விலகிக்கொண்டுள்ளமை அணிக்கு நெருக்கடியை தோற்றுவித்துள்ளது, ஆயினும் இவரது இடத்தை உஸ்மான் கவாஜா நிரப்புவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts: