இலங்கை அரையிறுதிக்கு தகுதி பெறாததற்கு இது தான் காரணம் – மலிங்கா !

Saturday, July 6th, 2019

உலகக் கோப்பை அரையிறுதிக்கு இலங்கை அணி தகுதி பெறாததற்கான காரணத்தை அந்த அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் மலிங்கா தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த மலிங்கா கூறியதாவது, எங்கள் அணி சிறந்த நிலையில் இருக்கிறது. ஆனாலும் அரையிறுதிக்கு தகுதி பெற முடியவில்லை. துர்தஷ்டவசமாக பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான போட்டியில் நாங்கள் விளையாடவில்லை. அதற்கு காரணம் மழை.

பின்னர் நாங்கள் மூன்று போட்டிகளில் வென்றோம். எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருந்தது. நல்ல நிலையில் இருக்கிறோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை.மழையால் ரத்து செய்யப்பட்ட இரண்டு போட்டிகளில் நாங்கள் விளையாடி இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், இயற்கையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என கூறியுள்ளார்.

இலங்கை வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் அணித்தலைவர் திமுத் கருணாரத்னே ஆகியோரை பாராட்டிய மலிங்கா. இந்த வீரர்கள் எதிர்காலத்திற்கான அணியை எடுத்துச் செல்ல வேண்டும் என கூறினார்.மேலும், தனது எதிர்கால திட்டம் குறித்த இலங்கை கிரிக்கெட் ஆணையத்துடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts: