இலங்கை அணி 91 ஓட்டங்களால் வெற்றி!

Saturday, July 27th, 2019

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நேற்று இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 91 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 314 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக குசல் ஜனித் பெரேரா 111 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி, 41.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

நேற்றைய போட்டியுடன் இலங்கை அணியின் வேகபந்து வீச்சாளர் லசித் மலிங்க ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுள்ளார்.

இதுவரை 226 ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடியுள்ள லசித் மலிங்க இதுவரை 338 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: