இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் தோல்வி!

Monday, July 19th, 2021

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 262 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் சாமிக்க கருணாரத்ன 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்நிலையில் 263 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இந்திய அணி 36.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

ஷிகர் தவான் ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களை இந்திய அணி சார்பில் அதிகப்படியாக பெற்றுக்கொடுத்தார்

Related posts: