இலங்கை அணி 35 ஓட்டங்களால் வெற்றி!

Wednesday, May 22nd, 2019

இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று(21) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 35 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பாக அணித்தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் அவிஷ்க பெர்ணான்டோ ஜோடி முதல் விக்கெட்காக 123 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

அவிஷ்க பெர்ணான்டோ 78 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் 74 ஓட்டங்களையும் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 77 ஓட்டங்களையும் பெற்றனர்.

டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 34 ஓவர்களில் 235 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய ஸ்கொட்லாந்து அணி 33.2 ஓவர்களில் 199 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை 1 – 0 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

Related posts: