இலங்கை அணி 109 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

Saturday, December 8th, 2018

பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற 23 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை – ஓமன் அணிகள் மோதிய நிலையில் இலங்கை அணி முதலில் பேட்டிங் விளையாடியது. அந்த அணியின் அவிஸ்கா பெர்ணாண்டோ, அஷிதா பொயகோடா, கமிண்டு மெண்டீஸ், ஷம்மு அஷன் ஆகிய நால்வரும் அரை சதம் அடித்து அசத்தினார்கள்.

இதன் காரணமாக இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 324 ஓட்டங்கள் குவித்தது.  அந்த அணியின் ஷம்மு அஷன் இறுதி வரை அவுட்டாகாமல் 57 ஓட்டங்கள் எடுத்தார்.

இதையடுத்து 325 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய ஓமன் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 215 ஓட்டங்களே எடுத்தது. இதன்மூலம் 109 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இலங்கை அணி சார்பில் ஷேஹ்ன் மதுஷங்கா மற்றும் ஷம்மு அஷன் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்

Related posts: