இலங்கை அணி வெற்றி!

Monday, July 3rd, 2017

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பாடிய சிம்பாப்வே அணி 33.4 ஓவர்கள் நிறைவில் சலக விக்கட்டுக்களையும் இழந்து 155 ஓட்டங்களை மாத்திரமே பெற்று கொண்டது.பந்து வீச்சில் லக்ஷான் சந்தகேன் 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.மேலும் இன்று தமது ஒருநாள் போட்டியில் விளையாடிய வனிது ஹசரங்க அடுத்தடுத்து மூன்று விக்கட்டுக்களை வீழ்த்தி ஹெட்ரிக் சாதனைப் படைத்தார்.இந்நிலையில் பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி, 30.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.இலங்கை அணி சார்பில் உபுல் தரங்க 75 ஓட்டங்களை பெற்றுகொண்டார்.ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளை வெற்றி கொண்டு சமநிலையில் உள்ளன.

Related posts: