இலங்கை அணி வெற்றி !

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்று இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்களை இழந்து 345 ஓட்டங்களை பெற்று கொண்டது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் அவிஷ்க்க பெர்ணாடோ 127 ஓட்டங்களையும் குசல் மென்டீஸ் 119 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்று கொண்டனர்.
பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணியின் செல்டன் கொட்ரெல் 4 விக்கட்களையும் அல்ஷாரி ஜோசப் 3 விக்கட்களையும் வீழ்த்தினர்.
346 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடும் மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
Related posts:
|
|