இலங்கை அணி வெற்றிக் களிப்பில்!

Thursday, June 28th, 2018

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 1:1 என்ற அடிப்படையில் சமநிலைப் படுத்தியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 4 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் 144 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 6 விக்கட்டுக்களை இழந்திருந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.
முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதல் இனிங்சில் 204 ஓட்டங்களையும் இரண்டாம் இனிங்சில் 93 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி தமது முதலாவது இனிங்சில் 154 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: