இலங்கை அணி வீரர்களுக்கு மன அழுத்தம்?

Friday, September 1st, 2017

மனரீதியாக எங்கள் அணிக்கு அந்த அழுத்தமும் இருப்பதாக நினைக்கவில்லை என இலங்கை அணி தலைவர் லசித் மலிங்கா கூறியுள்ளார்.

இலங்கை – இந்தியா இடையேயான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது

தொடரை ஏற்கனவே இலங்கை இழந்து விட்ட நிலையில் ஆறுதல் வெற்றிக்காக போராடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.மேலும், அடுத்த இரு போட்டிகளிலும் வென்றால் தான் உலக கிண்ண போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் இலங்கை அணி உள்ளது.போட்டி குறித்து இலங்கை அணி தலைவர் மலிங்கா கூறுகையில், சில போட்டிகளில் தோல்வி அடைந்தாலும், அதை பற்றி கவலைப்படாமல் இளம் வீரர்களுடன் அதிக நம்பிக்கையுடன் களமிறங்குகிறோம்.எங்களுக்கு அழுத்தம் மற்றும் டென்ஷன் இருப்பதாக நினைக்கவில்லை. மனரீதியாக இளம் வீரர்களுக்கு பலத்தை அதிகரித்திருக்கிறோம்

Related posts: