இலங்கை அணி முன்னிலை!

Monday, January 25th, 2021

இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 344 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 186 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் 55 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

புந்து வீச்சில் இலங்கை அணியின் லசித் எம்புல்தெனிய 137 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

முன்னதாக இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 381 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அதன்படி, இலங்கை அணி 37 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: