இலங்கை அணி படுதோல்வி!

Tuesday, August 15th, 2017

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், 1 இன்னிங்ஸ் மற்றும் 171 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.

மூன்றுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் இந்திய அணி தொடரை கைப்பற்றியதுடன், இவ்வாறு சகல போட்டிகளையும் வெற்றிக்கொண்டு இலங்கை மண்ணில் இந்திய அணி தொடரை கைப்பற்றிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.பல்லேகலை சர்வதேச விளையாட்டுத் திடலில் இடம்பெற்ற இந்த போட்டியில், பலோ ஒன் முறையில் தனது இரண்டாம் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.முன்னதாக தமது முதல் இன்னிங்சில் இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 135 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இதேவேளை, இந்திய அணி தமது முதலாவது இன்னிங்சிற்காக சகல விக்கட்டுக்களையும் இழந்து 487 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: