இலங்கை அணி பங்கெடுக்கும் இரவு பகல் ஆட்டம்!

Sunday, September 10th, 2017

ஐக்கிய அரபுக் குடியரசில் முதற்தடவையாக இலங்கை அணி இரவு பகல் கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத்தை , ஆடப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன . செப்டெம்பர் 28அன்று பாகிஸ்தான் அணியுடனான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமாகிறது .

இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ந்து , 5 ஒருநாள் ஆட்டப்போட்டிகளும், இரண்டு ரீ20 போட்டிகளும் இடம்பெறும் . ஒக்டோபர் 29அன்று பாதுகாப்பு விடயங்கள் சரியாக இருந்தால் , பாகிஸ்தானின் லாகூர் நகரில் ஒரு ஒருநாள் ஆட்டம் இடம்பெறுமென எதிர்பார்க்கிறார்கள்.

பாகிஸ்தானுக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 5ஒருநாள் ஆட்டப் போட்டிகளில் , முதலாவது ஒக்டோபர் 13அன்று அபுதாபியில் இடம்பெறவுள்ளது . இரண்டாவது , மூன்றாவது ஒருநாள் போட்டிகளும் அபுதாபியிலேயே இடம்பெறுகின்றன . கடைசி இரண்டு இரவு பகல் ஆட்டங்களும் , ஷார்ஜாவில் விளையாடப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது

Related posts: