இலங்கை அணி தரமானது இல்லை- ஜெயவர்தன !

உலகக் கோப்பை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் அளவுக்கு இலங்கை அணியிடம் தரம் இல்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
மஹேல ஜெயவர்தன கூறியதாவது, உலகக் கோப்பையில் முதல் நான்கு இடங்களில் இருப்பதற்கு போட்டி போடும் அளவுக்கு இலங்கை நிலையானது என்று நான் நினைக்கவில்லை.
லசித் மாலிங்காவை தவிர்த்து எதிரணி வீரர்ளுக்கு சவாலான அளவுக்கு பந்துவீச்சும் இருக்கவில்லை. அரையிறுதிக்கு நுழையும் அளவுக்கு அடிப்படையான தரமும், பண்புகளும் இலங்கை அணியிடம் இருக்கவில்லை.
மழையால் கைவிடப்பட்ட போட்டிகளால் வாய்ப்புகள் நழுவிப்போயின. இல்லாவிட்டால் இந்தியாவுக்கு எதிரான இறுதி லீக் போட்டி ஒரு தீர்க்கமான ஆட்டமாக இருந்திருக்கக் கூடும். நிலைமை மாறிவிட்டது
இலங்கை அணித்தலைவராக திமுத் கருணாரத்ன மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார். உலகக் கோப்பையில் சிறந்த முறையில் செயலாற்றிய திமுத், தலைமைப் பொறுப்பில் தொடர்வதை பார்க்க இலங்கை விரும்பும் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|