இலங்கை அணி எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல்!

Friday, May 26th, 2017

ஐசிசி தரப்படுத்தலில் 7 வது இடத்திற்கு இலங்கை அணி தள்ளப்பட்டுள்ளதை தொடர்ந்து இலங்கை அணிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

8வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியால் இலங்கைக்கு இவ்வாறு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.2019ம் ஆண்டில் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள உலக கிண்ணப்போட்டியிற்கு நேரடியாக தகுதிபெற வேண்டுமாயின் இலங்கை அணி இந்த 7 வது இடத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.அதாவது , இவ்வருடத்தின் செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரை ஐசிசி தரப்படத்தலில் முதல் 7 இடங்களை பிடித்துள்ள அணிகள் மாத்திரமே நேரடியாக உலக கிண்ண போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை பெறுகின்றன.

நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இலங்கை அணி இவ்வாறு 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் தற்போதைய நிலையில் 93 புள்ளிகளை பெற்றுள்ளன.தசங்களின் அடிப்படையில் பங்களாதேஷ் அணி முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: