இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்தால் தென் ஆப்பிரிக்கா முதலிடம்!

Tuesday, February 7th, 2017

இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இலங்கை அணி முழுமையாக கைப்பற்றும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்கா அணி தரவரிசைகளுக்கான பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, அங்கு மூன்று வித போட்டிகளிலும் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா அணியும், டி 20 தொடரை இலங்கை அணியும் வென்று அசத்தியது.

இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கிடையேயான ஒரு நாள் தொடரில் முதல் மூன்று போட்டிகளையும் தென் ஆப்பிரிக்கா வென்று தொடரை தன் வசம் ஆக்கியுள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளையும் தென் ஆப்பிரிக்கா வெற்றிபெறும் பட்சத்தில் முதல் இடத்தை பிடிக்கும்.

தற்போது அவுஸ்திரேலியா 118 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 118 புள்ளிகளுடன் தசம விகிதத்தில் இரண்டாவது இடம் வகிக்கிறது. இதனால் தொடரை முழுமையாக கைப்பற்றினால் அவுஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி தென் ஆப்பிரிக்கா முதல் இடம் வகிக்கும்.

இதற்கு அடுத்த இடத்தில் நியூசிலாந்தும், ஆறாவது இடத்தில் இலங்கை அணியும் உள்ளது.

201702031337062269_Tomorrow-3rd-ODI-sri-lanka-vs-south-africa_SECVPF

Related posts: