இலங்கை அணியுடனான இருபதுக்கு இருபது போட்டியில் சஹிபுல் ஹசன்!

shakib-afp759 Tuesday, February 13th, 2018

பங்களாதேஸ் அணித் தலைவர் சஹிபுல் ஹசன் காயத்தில் இருந்து மீண்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இவர் பங்குகொள்ளவுள்ளார்.

இருப்பினும் எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கை அணியுடன் ஆரம்பமாகவுள்ள முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிம்பாப்வே மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான முக்கோண ஒருநாள் போட்டியின் போது சஹிபுல் ஹசன் காயத்திற்கு உள்ளானார்.அதன் காரணமாக இலங்கை அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் அவர் பங்குகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.