இலங்கை அணியில் இருந்து மத்யூஸ் நீக்கம்!

Thursday, September 27th, 2018

இலங்கை அணி வீரர் மேத்யூஸ் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டதற்கு அவர் விக்கெட்டுக்கு இடையில் சரியாக ஓடவில்லை என்பது காரணமாக சொல்லப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் சமீபகால செயல்பாடுகள் மோசமாக உள்ள நிலையில் ஆசிய கிண்ண தொடரிலிருந்து லீக் சுற்றிலேயே வெளியேறியது.

இதையடுத்து அந்த அணியின் தலைவராக இருந்த மேத்யூஸ் நீக்கப்பட்ட நிலையில் சண்டிமால் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.

இதற்கான அணி விபரம் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் மேத்யூஸ் பெயர் இதில் இடம்பெறவில்லை.

மேத்யூஸ் நிக்கப்பட்டதற்கு காரணமாக அவர் விக்கெட்டுக்கு இடையில் சரியாக ஓடுவதில்லை என்றும் இதனால் அவர் அடிக்கடி ரன் அவுட் ஆகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனால் பிட்னஸ் தேர்வில் வெற்றி பெற்று மேத்யூஸ் அணியில் மீண்டும் இடம்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: