இலங்கை அணியில் இருந்து பிரபல வீரர் புறக்கணிப்பு?

Friday, July 7th, 2017

தினேஸ் சந்திமாலை துன்புறுத்தி, பாதிப்பை ஏற்படுத்துவதை உனடியாக நிறுத்த வேண்டும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அர்ஜூன ரணதுங்க.தினேஸ் சந்திமால் சிறந்த ஒரு வீரர் என்பதுடன் அரிய திறமை வாய்ந்தவர்.மேலும் அவர் அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்பவர்.கடந்த வருடம் அவர் சிறந்த சராசரியை பெற்றுள்ளார்.எனக்கு புதுமையாகவுள்ளது, தெரிவுக்கு குழுவின் பிரதானிகள் அவர்களின் கடந்த காலத்தை மறந்துள்ளமையை.அந்த காலத்தில் சில வீரர்களுக்கு சதமடிக்க அதிக போட்டிகள் விளையாட வாய்ப்பளிக்கப்பட்டன.அவர்கள் இளைய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை.இவர்களே தற்போது சந்திமாலையும் பயன்படுத்த தவறியுள்ளனர்.அவரின் நம்பிக்கையை சிதைக்கின்றனர்.ஐ.பி.எல் தொடரை புறக்கணித்த ஒரே வீரர் சந்திமால் ஆகும்.அவர் அதனை புறக்கணித்து இங்கிலாந்து சுற்றுப்போட்டியில் கலந்து கொண்டு, தனது திறமையை வெளிப்படுத்தினார்.ஐ.பி.எல்லின் ஊடாக நன்மை பெற்றதன் காரணமாகவா தெரிவுக் குழுவின் பிரதானிகள், தினேஸ் சந்திமாலை இவ்வாறு நடத்துகின்றனர்  என அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts: