இலங்கை அணியில் இடம் கிடைத்தும் சோபிக்காத வீரர்!

Saturday, October 28th, 2017

இலங்கை அணியின் இடது கை தடுப்பாட்ட விரரான மஹேலா உடவத் 8 வருடங்களுக்கு பின் அணியில் இடம் கிடைத்தும் சோபிக்கத்தவறியுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி சொதப்பியதால், டி20 தொடரில் இலங்கை அணியில் இளம் வீரர்கள் பெரும்பாலானோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

அப்படி அணிக்கு 8 வருடங்களுக்கு பின் திரும்பியவர் தான் மஹேலா உடவத்(31). இவர் ஆரம்ப காலத்தில் ஜெயசூர்யாவுக்கு மாற்று வீர்ராக வரலாம் என்றும், கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்கும் என்று கூறப்பட்டது.ஆனால் பெரிய அளவில் சாதிக்காததால், அணியில் தொடர்ந்து இடம் கிடைக்கும் வாய்ப்பை இழந்தார்.இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அப்போட்டியில் இலங்கை அணியும் தோற்றது.இலங்கை அணிக்கு 9 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடிய மஹேலா உடவத் கடைசியாக கடந்த 2009-ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: