இலங்கை அணியில் அகிலவிற்கு பதிலாக நிசான் பீரிஸ்!

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி வீரர் அகில தனஞ்சயவிற்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் நிசான் பீரிஸ் விளையாடவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
பந்துவீச்சு பாணியில் சந்தேகம் எழுப்பப்பட்ட நிலையில், அது தொடர்பான பரிசோதனைக்காக அகில தனஞ்சயவிற்கு அவுஸ்திரேலியாவின், பிரிஸ்பேனில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்தில் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக நிஷான் பீரிஸ் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சானியா - ஹிங்கிஸ் ஜோடி பிரிகிறது!
இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் கேள்விக்குறி - அர்ஜுன
இன்றுடன் 10 வருடங்கள் நிறைவு !
|
|