இலங்கை அணியிலிருந்து குசல் பெரேரா, சிறிவர்தன வெளியேற்றம்!

இலங்கை வந்துள்ள வங்கதேச அணியுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியின் விபரத்தை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அந்த வகையில் அணியின் தலைவராக உபுல் தரங்க செயற்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கடந்த பயிற்சி போட்டியில் ஏற்பட்ட உபாதை காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் இருந்தும் விக்கெட் காப்பாளரும் , துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா நீக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் குசல் பெரேராவுக்கு பதிலாக மிலிந்த சிறிவர்தன விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்த போதும், அந்த பெயர் பட்டியலில் சிறிவர்தனவின் பெயர் இல்லை.
இலங்கை அணியின் அணி விபரம் –
உபுல் தரங்க (அணித்தலைவர்), தினேஷ் சந்திமால் (உபத்தலைவர்), நிரோஷன் திக்வெல்ல, தனஞ்சய த சில்வா, குசல் மென்டிஸ், அசேல குணரத்ன, தனுஷ்க குணதிலக, சுரங்க லக்மால், லஹிரு குமார, விக்கும் சஞ்சய், திசர பெரேரா, சசித் பத்திரன, லக்ஷான் சந்தகன்
Related posts:
|
|