இலங்கை அணியின் முன்னாள் பயிற்சியாளர் இறப்பு!

Wednesday, March 27th, 2019

அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பயிற்சியாளருமான ப்ருஸ் யார்ட்லி(71) உலகினை விட்டு பிரிந்துள்ளார்.

புற்றுநோய் காரணமாக அவுஸ்திரேலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(27) உயிரிழந்துள்ளார்.

1988 – 1996ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்சியாளராக கடமையாற்றி இருந்தார். முத்தையா முரளிதரனின் பந்து வீச்சு தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டில் முரளிதரன் சார்பில் முன்னின்றவரும் இவர் என்றால் மிகையாகாது.

அவுஸ்திரேலியா சார்பில் டெஸ்ட் போட்டிகள் 33இல் 126 விக்கெட்களை கைப்பற்றியுள்ளதோடு, சர்வதேச போட்டிகள் 07ல் விளையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: