இலங்கை அணியின் மற்றமொரு வீரருக்கும் உபாதை!

இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் தொடர்ந்தும் காயத்தினால் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். சுதந்திர கிண்ண கிரிக்கட் போட்டிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இலங்கை அணியின் 23 வயதான முன்னிலை துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் தற்போது காயமடைந்திருப்பதாகதெரிவிக்கப்படுகிறது.
இந்திய அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியின் போது அவர் காயமடைந்ததாக, சிறிலங்கா கிரிக்கட் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சுதந்திர கிண்ண தொடரின் அடுத்த போட்டியில் குசல் மெண்டிஸ் விளையாடுவாரா இல்லையா என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய குசல் மெண்டிஸ் அடுத்தடுத்து அரைச்சதங்களைப் பெற்றுள்ளதுடன் சிக்கார் தவான் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிகஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
Related posts:
|
|