இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளர்? 

Wednesday, April 18th, 2018

பாகிஸ்தான் அணியின் முன்னாள் பிரபல வீரர் முஸ்தாக் அகமட்டை இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிப்பது தொடர்பில் கிரிக்கட் அதிகாரிகள் அவதானம்செலுத்தியுள்ளனர்.

அவர் இதற்கு முன்னர் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு பயிற்சி வழங்கியுள்ளார்.

தற்போது இலங்கை அணிக்கு களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ஒருவருக்கான தேவை  ஏற்பட்டுள்ளது.

இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் பதவிக்கு சந்திக்க ஹத்துருசிங்க நியமிக்கப்பட்ட பின்னர் களத்தடுப்பு பயிற்சியின் கண்காணிப்பாளராக நிக் பொதாஸ் செயற்பட்டு வந்தார். எனினும்அவர் உடன்படிக்கைகளை நிறைவு செய்துவிட்டு பதவியில் இருந்து விலகியுள்ளார். இதனாலேயே பாகிஸ்தான் அணியின் முன்னாள் பிரபல வீரர் முஸ்தாக் அகமட் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது

Related posts: