இலங்கை அணியின் பரிதாப நிலை குறித்து ஆராய்ந்துபார்க்க வேண்டும் – முத்தையா முரளிதரன்!

Sunday, January 6th, 2019

கடந்த 20 வருட காலமாக எங்களின் இலங்கை கிரிக்கெட் அணி முதலாம், இரண்டாம் இடங்களை தக்க வைத்திருந்தது.

கடந்த மூன்று வருட காலமாக இலங்கை கிரிக்கெட் அணியினர் சாதனைகள் எதுவும் படைக்கவில்லை. இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆராய்ந்து தான் பார்க்க வேண்டும் என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்

இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமைத்துவத்தை மாத்திரம் குறை கூற முடியாது. அணியின் வீரர்களும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும். இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு பணத் தட்டுப்பாடு இல்லை.

இதனால் எவ்வாறு கிரிக்கெட் வீரர்களின் ஆளுமையை மற்றும் திறன்களை விருத்தி செய்து 20 வருட வெற்றிப் பயணத்தை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து முயற்சிக்க வேண்டும் என்றார்.

Related posts: