இலங்கை அணியின் நிரந்தர பயிற்சியாளர் குறித்து தகவல்!

இலங்கை கிரிக்கெட் அணிக்கு நிரந்தர பயிற்சியாளர் அடுத்தாண்டு ஜனவரி மாதம் நியமிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் உறுதியாக தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் நிக் போத்தாஸ் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபகாலமாக ஆட்டம் கண்டு வரும் இலங்கை அணி நிரந்தர பயிற்சியாளர் இல்லாமல் தடுமாறி வருகிறது.நிரந்தர பிரதான பயிற்சியாளரை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் முயற்சித்து வருகிறது.
இலங்கை – இந்தியா இடையிலான தொடர் டிசம்பர் மாதம் 24-ஆம் திகதி நிறைவடைவுள்ள நிலையில் அதன் பிறகு புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பணி தொடங்கும் என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.அதன்படி அடுத்தாண்டு ஜனவரி மாதம் இலங்கை அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமித்து விடுவோம் என இலங்கை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
Related posts:
|
|