இலங்கை அணியின் தோல்வி: ஜெயவர்த்தன பதில்!

அழுத்ததில் இருக்கும் வீரர்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் போன்ற செயல்கள் உதவுவதில்லை, இதனால் ரசிகர்கள் அமைதியாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும் என்று மஹேல ஜயவர்த்தன கூறியுள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது.
இதையடுத்து இரு அணிகள் மோதும் ஒருநாள் போட்டி கொண்ட தொடரின், முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
இதனால் இலங்கை அணியின் தொடர் தோல்வியால் ரசிகர்கள் பெரும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இதனால் அவர்கள் போட்டி முடிந்ததும் இலங்கை வீரர்களின் பேருந்தை வழிமறித்து கூச்சலிட்டனர்.
அதுமட்டுமின்றி எங்கள் கிரிக்கெட் அணி எங்களுக்கு மீண்டும் வேண்டும், கிரிக்கெட்டில் அரசியல் வேண்டாம் போன்ற கோஷங்களை எழுப்பினர்.
இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயவர்த்தனே தனது டுவிட்டர் பக்கத்தில், இது போன்ற தோல்வியால் வீரர்கள் விரக்தியில் இருப்பார்கள்.
அதை புரிந்து கொள்ளுங்கள், அழுத்ததில் இருக்கும் வீரர்களுக்கு இது போன்ற செயல்கள் உதவுவதில்லை, இதனால் ரசிகர்கள் அமைதியாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் ஒரு ரசிகர் அப்போ வெற்றிக்கு என்ன தான் வழி என்று கேட்ட போது, நிச்சயம் இதற்கான தீர்வு காணப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்
Related posts:
|
|