இலங்கை அணியின் தவறான தகவல்!

Tuesday, December 12th, 2017

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் பின்னர், இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை வெளியிட்ட ஊடக அறிக்கையில் இடம்பெற்றிருந்த தவறான தகவல்கள் குறித்து எமது செய்திச் சேவை கடந்த 8 ஆம் திகதி வெளிக்கொண்டுவந்தது.

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட சிங்கள மற்றும் ஆங்கில ஊடக அறிக்கைகளுக்கு இடையில் முரண்பாடுகள் காணப்பட்டமை இதன்போது வெளிக்கொண்டுவரப்பட்டது

விசேடமாக சர்வதேச கிரிக்கட் தரப்படுத்தலில் இலங்கைக்கு கிடைத்திருந்த இடம் குறித்து தவறான தகவல்கள் வெளியிடப்பட்டமை இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது

அத்துடன், இலங்கை அணி வீரர் சுரங்க லக்மால் குறித்து கிரிகட் கட்டுப்பாட்டுச் சபை வெளியிட்டிருந்த தகவல்களும் சரியானதாக அமைந்திருக்கவில்லை

கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவரின் கருத்துக்களின்படி மேலும் 2 புள்ளிகள் பெறும்பட்சத்தில் இலங்கை சர்வதேச கிரிக்கட் தரப்படுத்தலில் 6 ஆவது இடத்தில் இருந்து 4 ஆவது இடத்திற்கு முன்னேற்றமடையும் எனினும் சர்வதேச கிரிக்கட் தரப்படுத்தலின்படி அவ்வாறு இடம்பெறவில்லை.

தற்போது 94 புள்ளிகளை பெற்றுள்ள இலங்கை அணி நான்காவது இடத்திற்கு முன்னேறுவதற்கு 4 புள்ளிகளை பெறவேண்டியுள்ளது.

Related posts: