இலங்கை அணியின் தலைவர் திசர பெரேராவின் கருத்து!

இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் 20க்கு 20 போட்டிகளுக்கான தலைவராக திஸர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார் இலங்கை கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 க்கு 20 போட்டித் தொடர்களை அவர் வழிநடத்தவுள்ளார். இலங்கை அணியின் ஒருநாள் அணித் தலைவராக இதுவரை பதவி வகித்த உபுல் தரங்க தலைமையிலான இலங்கை அணி, 22 போட்டிகளில் விளையாடி, 18 தோல்விகளை சந்திருந்தது.
இதையடுத்து, 20 க்கு 20 கிரிக்கட் போட்டித் தலைவராக செயற்பட்ட திஸர பெரேரா, வெளிப்படுத்திய திறன் வெளிப்பாட்டை கருத்திற்கொண்டே அவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையின் ஒருநாள் அணியை அஞ்சலோ மெத்தியூஸ், உபுல் தரங்க, சாமர கபுகெதர, லசித் மாலிங்க ஆகியோர் வழிநடத்தி இருந்தனர்.
இந்த நிலையில்,இவ் ஆண்டில் இலங்கை அணியின் ஐந்தாவது ஒருநாள் போட்டித் தலைவராக திஸர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் , தனக்கு வழங்கப்பட்டுள்ள தலைமைப்பதவியை உரிய வகையில் பயன்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக இலங்கை அணியின் புதிய ஒருநாள் அணித்தலைவர் திசர பெரேரா தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|