இலங்கை அணிக்கு 482 ஓட்டங்கள்!

Saturday, October 7th, 2017

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

முதல் இன்னிங்சில் 159.2 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த இலங்கை 482 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது.

இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன 196 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 62 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

முன்னதாக இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளமை கூறத்தக்கது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி பகலிரவு போட்டியாக இடம்பெறுவதுடன், இதற்காக இளஞ்சிவப்பு இளஞ்சிவப்பு நிறத்திலான பந்து பயன்படுத்தப்படுகின்றது.

பகலிரவு போட்டியாக இடம்பெறும் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி விளையாடுவது இதுவே முதல் சந்தர்ப்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: