இலங்கை அணிக்கு புதிய வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர்!

Wednesday, August 9th, 2017

 

இலங்கை அணிக்கான புதிய வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ருமேஷ் ரத்னநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி, இந்திய அணிக்கெதிராக தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த நிலையில், இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதேவேளை, தற்போது வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்படும் சமிந்த வாஸ், 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய அணிக்கெதிரன இரு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி மோசமான தோல்விகளைச் சந்தித்திருந்த நிலையில், இரு போட்டிகளிலும் இந்திய அணிக்கு ஓட்டங்களை வாரிக் கொடுத்த இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: