இலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
Sunday, June 18th, 2023இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான பாபர் அசாம் தலைமையிலான 16 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் ஷஹீன் ஷா அப்ரிடி டெஸ்ட் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய வீரர்களான முகமது ஹரேய்ரா மற்றும் ஆமர் ஜமால் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் காலியில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது காயமடைந்த ஷஹீன் அப்ரிடி டெஸ்ட் அணிக்கு அழைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இப்போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜூலை 9ஆம் திகதி இலங்கை வர உள்ளதமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பார்சிலோனாவுக்கு அபார வெற்றி!
இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி!
உலக சாதனையாளர் உள்ளிட்ட வீரர்கள் நாட்டை வந்தடைந்தனர் – விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு!
|
|