இலங்கை அணிக்கு இமாலய இலக்கு!  

Tuesday, January 8th, 2019

இலங்கை – நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணிக்கு 365 என்ற வெற்றி இலக்கை நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத் தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட் இழப்பிற்கு 364 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

நியூசிலாந்து அணி சார்பில் ரோஸ் டெய்லர் அதிகபட்சமாக 137 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

ஹென்றி நிக்கோலஸ் ஆட்டமிழக்காது 124 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.கேன் வில்லியம்சன் 55 ஓட்டங்கள்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் லசித் மாலிங்க மூன்று விக்கட்டுக்களையும் , லக்ஷான் சந்தகென் ஒரு விக்கட்டையும் கைப்பற்றினர். மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்களில் நியூசிலாந்து அணி ஏற்கனவே கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.