இலங்கையை வென்றது ஆஸி!

Saturday, January 26th, 2019

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.  

குறித்த போட்டி பிரிஸ்பேனில் இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.  அதன்படி முதல் இன்னிங்சில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 323 ஓட்டங்களை பெற்றது. அதன்படி அவுஸ்திரேலிய அணி 179 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து தனது இரண்டாம் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அதன்படி போட்டியில் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

Related posts: