இலங்கையைவிட சிறப்பாக பாகிஸ்தான் செயற்படும் – அசாட் சாபிக்

Friday, June 3rd, 2016

இங்கிலாந்துடனான கிரிக்கெட் தொடரின் போது பாகிஸ்தான் அணி, இலங்கைகைய விட சற்று சிறப்பாக செயற்படும் என பாகிஸ்தானின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் அசாட் சாபிக் (Asad Shafiq) தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையைவிட, பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வரிசை சற்று பலமானதாக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது. இரண்டாவது போட்டியில் 9 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்கிலாந்தின் வேகபந்து வீச்சாளர்களான ஸ்ட்வர் பிரோட் (Stuart Broad) மற்றும் ஜேம்ஸ் அன்டஸன் (James Anderson) ஆகியோர், உலக தரவரிசையில் மூன்றாம் மற்றும் முதலாம் தரத்தில் உள்ளனர்.

எவ்வாறாயினும் பாகிஸ்தான் அணி அவர்களை உரிய முறையில் எதிர்கொள்ளும் எனவும் அசாட் சாபிக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜீலை 14ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் 7ஆம் திகதி வரையில் 4 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபதுக்கு இருபது கொண்ட தொடரில் பங்குகொள்வதற்காக பாகிஸ்தான் அணி இங்கிலாந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: