இலங்கையுடன் இந்தியாவும் ஐ.சி.சிக்கு எதிர்ப்பு!

சர்வதேச கிரிக்கெட் சபையின் (“Two tier Test” )“ரூ டையர் டெஸ்ட்” முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்திய கிரிக்கெட் சபையின் முடிவினை வரவேற்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வாரியம் சர்வதேச அணிகளை இரண்டு பிரிவுகளாக பிரித்து டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது. எவ்வாறாயினும் இந்த தீர்மானத்தின் மூலம் டெஸ்ட் தரவரிசையில் பின்தங்கி இருக்கும் அணிகளுக்கு தீங்கு ஏற்படுவதோடு, ரசிகர்களின் ஆர்வம் குறைந்து வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் என்ற காரணத்தினால் இலங்கை கிரிக்கெட் சபை குறித்த “ரூ டையர் டெஸ்ட்” முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இதேவேளை குறித்த “டு டையர் டெஸ்ட்” முறைக்கு இந்திய கிரிக்கெட் சபையும் தமது எதிர்ப்பினை வெளியிடுவதாக தெரிவித்துள்ளது.
“ரூ டையர் டெஸ்ட்” முறைக்கு இந்திய கிரிக்கெட் சபை எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை கிரிக்கெட் சபைக்கு தமது ஆதரவினை வெளியிட்டுள்ளதால் தமது வரவேற்பை தெரிவித்துக்கொள்வதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|