இலங்கையில் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்ட வார்னே!

Saturday, October 13th, 2018

அவுஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, தனது புத்தகத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட புகார் குறித்து தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய முன்னாள் வீரரும், சுழற்பந்துவீச்சு ஜாம்பவானுமான ஷேன் வார்னே ‘No Spin’ எனும் பெயரில் தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் பல சர்ச்சைக்குரிய விடயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1994ஆம் ஆண்டு பாகிஸ்தான்-அவுஸ்திரேலியா இடையிலான போட்டியின் போது, பாகிஸ்தான் வீரரான சலீம் மாலிக் போட்டியை டிரா செய்யுமாறும், பந்துகளை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசுமாறும் வார்னேவிடம் கூறியுள்ளார். அவ்வாறு செய்தால், அடுத்த அரைமணி நேரத்தில் அறையில் 2,00,000 டொலர்கள் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் வார்னே, மற்றொரு அவுஸ்திரேலிய வீரர் மார்க் வாஹ் மற்றும் சலீம் மாலிக் ஆகியோர் சூதாட்ட சர்ச்சையில் சிக்கினர். இந்த சர்ச்சையில் சலீம் மாலிக்கிற்கு தடை விதிக்கப்பட்டது.

மேலும், இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய சமயத்தில், ஷேன் வார்னே மற்றும் மார்க் வாஹ் ஆகியோர் கேசினோ எனும் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வார்னே கூறுகையில், ‘நான் 5000 டொலர்களை கேசினோவில் இழந்தேன். அப்போது மார்க் வாஹ்-யின் நண்பர் எனக்கு 5000 டொலர்கள் தருவதாக கூறினார். ஆனால், நான் வேண்டாம், பரவாயில்லை என்று கூறினேன். வேறு எதுவும் நடக்கவில்லை’என தெரிவித்துள்ளார்.

Related posts: