இலங்கையில் இரண்டு விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று!

இலங்கையைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தேசிய விளையாட்டு மருத்துவ நிறுவகத்தின் பணிப்பாளர் டொக்டர் லால் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
ஃபென்சிங் (வாள்வீச்சு) மற்றும் கூடைப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுக்களில் ஈடுபடும் வீரர்களே இவ்வாறு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார். பணியிடங்களில் வைத்து இவ்வாறு நோய்த் தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொவிட்-19 நோய்த் தொற்று காரணமாக இந்த ஆண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடாத்த முடியாதுள்ளதாக டொக்டர் லால் தெரிவித்துள்ளார்.
Related posts:
மேற்கிந்திய தீவுகள் அணியை வென்றது பாகிஸ்தான் !
வீடியோ கேம்ஸ் - ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இணைகிறது!
இலங்கை வீரர்கள் செய்தது சரியே - இந்திய மருத்துவர்!
|
|