இலங்கையில் அசத்தும் அவுஸ்திரேலியா!
Wednesday, July 20th, 2016
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் யூலை 30 திகதி நடக்கிறது. தற்போது அவுஸ்திரேலிய அணி 3 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் பங்கேற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை லெவன் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன் படி, முதல் இன்னிங்சில் அந்த அணி 229 ஓட்டங்களை குவித்தது. அணித்தலைவர் சிறிவர்த்தனே (53), குணரத்னே (58) ஆகியோர் அரைசதம் விளாசினர். டி சில்வா 49 ஓட்டங்கள் எடுத்தார்.
அதே சமயம் அவுஸ்திரேலிய அணி சார்பில், சுழல் வீரர் ஸ்டீவ் ஓ’கீபே 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதன் பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி சிறப்பாக ஆட ஆரம்பித்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 127 ஓட்டங்கள் எடுத்தது. நேற்று தொடர்ந்து ஆடிய அவுஸ்திரேலிய அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுக்கு 431 ஓட்டங்களை எடுத்துள்ளது.
ஜோ பர்ன்ஸ் (72), அணித்தலைவர் சுமித் (57), ஸ்டீவ் ஓ’கீபே (62) ஆகியோர் அரைசதம் அடித்தனர். தவிர, ஷான் மார்ஷ் (47), ஆடம் வோக்ஸ் (43), மிட்செல் ஸ்டார்க் (45) ஆகியோர் சிறப்பாக ஆடினர். இலங்கை லெவன் அணி சார்பில் ஷெகன் ஜெயசூரியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.அவுஸ்திரேலிய அணி தற்போது இலங்கை லெவன் அணியை விட 202 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கிறது.
Related posts:
|
|